×

மாங்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் 743 காளைகள் சீறிப்பாய்ந்தன-மாடுகள் முட்டியதில் 43 பேர் காயம்

விராலிமலை : மாங்குடியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டில் 743 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் மாடுகள் முட்டியதில் 43 பேர் படுகாயமடைந்தனர்.அன்னவாசல் அருகேயுள்ள மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அக்கரைபட்டி, ஆயிபட்டி ஆகிய நான்கு ஊர்களுக்கு உட்பட்ட அடைக்கலம் காத்த அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டி நிகழாண்டு நேற்று காலை 8.20 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. 743 காளைகள் களம் காண்ட இப்போட்டியில் 191 மாடுபிடி வீரர்கள் ஆறு குழுக்களாக பிரிக்கப்பட்டு காளைகளை அடக்கினர். இப்போட்டியில் 43 பேர் காயமடைந்தனர் இதில் 5 பேர் மேல் சிகிச்சைக்காக அன்னவாசல் மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போட்டியை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் மெய்யநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், கரூர், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் பாபு தலைமையில் கால்நடை மருத்துவ குழுவினர் 22 பேர் பல்வேறு கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டது.

போட்டியில் சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு பணம் முடிப்பு, சைக்கிள், கட்டில், அயர்ன் பாக்ஸ், சில்வர் அண்டா, வெள்ளி காசு உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்காணவர்கள் வந்திருந்து திடலின் இருபுறமும் திரண்டு நின்று கண்டு போட்டியை கண்டு ரசித்தனர். மருத்துவ துறை சார்பில் ஜல்லிக்கட்டு திடல் அருகே தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு 2 மருத்துவர்கள் தலைமையில் மருத்துவ குழுவினர் காயம் அடைந்த 43 பேருக்கு உடனுக்குடன் சிகிச்சை அளித்தனர். இதில் 5 பேர் மேல் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணியில் டிஎஸ்பி காயத்ரி தலைமையில் போலீசார், ஊர்காவல்படையினர் 121 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post மாங்குடியில் நடந்த ஜல்லிக்கட்டில் 743 காளைகள் சீறிப்பாய்ந்தன-மாடுகள் முட்டியதில் 43 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Mangudi - 43 ,Viralimalai ,Mangudi ,Annavasal ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...